Skip to main content

இன்று (Mar 8, 2024) உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நாம் கல்விக் கூடங்களிலும் , வேலை வாய்ப்புகளிலும் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (Diversity, Equity, Inclusivity) என்று பேசுகிறோம்.

ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல பெண் கவிஞர்கள் கவிதை எழுதி இருக்கிறாரகள். அந்த காலத்திலேயே பெண்கள் கல்வி அறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்கு இந்த கவிதைகளே சான்று.

சங்க காலம் என்பது தமிழ் இலக்கியத்தின் செவ்வியல் காலமாகும். இது கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது.

மேலும, இந்த கவிதைகள் மதம், சமயம் சார்ந்த கவிதைகளாக இல்லாமல், அகம் புறம் சார்ந்த, மனித மனங்களை பாடிய கவிதைகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அகம் மற்றும் புறம் ஆகியவை சங்க இலக்கியத்தின் இரண்டு முக்கிய வகைகளாகும். அகப்பாடல்கள் காதல், உணர்வுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களைக் கையாள்கின்றன, அதேசமயம் புறப்பாடல்கள் போர், வீரம் மற்றும் பொது வாழ்க்கை பற்றியவை.

சங்க கால பெண் கவிஞர்களில் நமக்கு தெரிந்த 41 பெயர்கள்:

1. அஞ்சியத்தை மகள் நாகையார் 

2. அஞ்சில் அஞ்சியார் 

3. அள்ளுர் நன்முல்லையார் 

4. ஆதிமந்தியார் 

5. ஊண்பித்தை 

6. ஒக்கூர் மாசாத்தியார் 

7. அவ்வையார் 

8. கச்சிப்பேட்டு நன்னாகையார் 

9. கழார்க்கீரன் எயிற்றியார்

10. காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் 

11. காமக்காணி பசலையார் 

12. காவற்பெண்டு 

13. குமுழிஞாழலார் நப்பசலையார் 

14. குறமகள் குறியெயினி 

15. குறமகள் இளவெயினி

16. குன்றியனார் 

17. தாயங்கண்ணியார் 

18. நக்கண்ணையார் 

19. நல்வெள்ளியார் 

20. நன்னாகையார் 

21. நெடும்பல்லியத்தை

22. பாரி மகளிர் 

23. பூங்கண் உத்திரையார் 

24. பூதப்பாண்டியன் தேவியார் 

25. பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் 

26. பேய்மகள் இளவெயினி

27. பொதும்பில் புல்லாளங்கண்ணியார்

28. பொன்மணியார் 

29. பொன்முடியார் 

30. போந்தைப் பசலையார் 

31. மதுரை மேலைக்கடையத்தார் நல்வெள்ளையார் 

32. மாரிப்பித்தியார் 

33. மாறோக்கத்து நப்பசலையார் 

34. முள்ளியூர்ப் பூதியார் 

35. வருமுலையாரித்தி

36. வெண்ணிக் குயத்தியார் 

37. வெண்பூதியார் 

38. வெண்மணிப் பூதியார் 

39. வெள்ளிவீதியார் 

40. வெள்ளைமாளர் 

41. வெறி பாடிய காமக்கணியார் 

ஆதாரம்: சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் – ந. முருகேசபாண்டியன்

Leave a Reply