Skip to main content

சங்ககால கவிதையும் நவீன நிதி மேலாண்மையும்

புறநானூற்றில் பிசிராந்தையார் என்ற புலவர் பாண்டிய மன்னனுக்கு அறிவுரையாக எழுதிய ஒரு தமிழ்ப் பாடலுடன் நான் தொடங்குகிறேன்.

இந்தக் கவிதை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது, ஆனால், அது இன்றும் பொருத்தமாக இருக்கிறது. அது எப்படி என்று நாம் கடைசியில் பார்க்கலாம்.

தயவுசெய்து என்னுடன் கொஞ்சம் பொறுமையாக இருந்து கீழே உள்ள கவிதையைப் படியுங்கள். 

யானை புகுந்த நிலம் – பிசிராந்தையாரின்அறிவுரை

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,

மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போல,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

  • பிசிராந்தையார், புறநானூற்றின் 184

கவிதையின் பொருள் 

மிக குறைந்த நிலமானாலும், அதில் விளைந்த நெல்லை அறுத்து , கவளம் கவளமாக யானைக்கு ஊட்டினால் பல நாட்களுக்கு அது வரும். யானையும் பல நாள் பசி அடங்கி இன்புறும்.

அப்படி அல்லாமல், பல நூறு வயல்கள் இருந்தாலும், தன் போக்கிலே யானை சென்று, நெல்லை உண்ண நினைத்து, வயளுக்குள்ளே புகுந்தால், அது உண்ட நெல்லைக் காட்டிலும், அதன் காலடி பட்டு அழிந்த நெல்லே மிகுதியாக இருக்கும்.

அது போல, அறிவுடைய அரசன் வரி வசூலிக்கும் முறைகளை நன்கு அறிந்து செயல்பட்டால், நிறைய செல்வத்தை சேர்க்க முடியும். அதன் மூலம் நாடு மிகவும் செழிக்கும்.

அரசன் நெறியில்லாதவனாக இருந்து, தன சுற்றத்தாரோடும் , நண்பர்களோடும் கவலையில்லாமல் செலவு செய்தால், யானை புகுந்த வயலைப் போல செல்வம் நிலைக்காமல் போய்விடும். அந்த நாடும் அழிவு பாதை நோக்கி செல்லும்.

ஆப்பிள் Vs கூகிள்: பங்குதாரர்களுக்கு எது முக்கியம்?

 2013 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரர்கள் டிம் குக்கை எதிர்த்து ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினர், ஏனெனில் ஆப்பிளின் பெருகி வரும் பண இருப்பை  (Cash pile) அவர்கள் அங்கீகரிக்கவில்லை, மேலும் குக்கைப் பங்குதாரர்களுக்குப் (shareholders) பணத்தை விநியோகிக்க விரும்பினர். ஆப்பிளின் இருப்புநிலைக் குறிப்பில் (Balance சீட்) பணம் இருந்தாலும் அல்லது பங்குதாரர்களின் பாக்கெட்டில் இருந்தாலும் என்ன வித்தியாசம்? அப்போதிருந்து, ஆப்பிள் நிறுவனம் பங்குதாரர்களுக்கு 280 பில்லியன் டாலர்களுக்கு மேல் விநியோகித்துள்ளது, பெரும்பாலும் பங்குகளைத் திரும்ப வாங்குவதன் மூலம். அது புத்திசாலித்தனமா?

ஆப்பிள்ல் கிளர்ச்சி நடந்த நேரத்தில், ஆல்ஃபபெட் (Alphabet – aka Google) தனது பங்குதாரர் கட்டமைப்பை மாற்றியது, முக்கிய பங்குதாரர்களின் வாக்களிக்கும் உரிமைகளை அதிகரிப்பதன் மூலம், இதுபோன்ற சவாலை எதிர்கொள்ளக்கூடாது என்பதை உறுதிப்படுத்தியது. அப்போதிருந்து, ஆல்ஃபபெட் (Alphabet) பண இருப்பை (Cash pile) உருவாக்கியுள்ளது, ஆனால் மிகக் குறைவாகவே விநியோகித்துள்ளது, அதற்கு பதிலாக அதன் பல்வேறு வணிகங்களில் பணத்தை மறு முதலீடு செய்யத் தேர்ந்தெடுத்துள்ளது. அது புத்திசாலித்தனமா?

பணப்புழக்கமும், மூலதன ஒதுக்கீடும்: நிறுவனங்களுக்குப் பாடம்

நிறுவனங்கள் தங்கள் மதிப்பை (value) மேம்படுத்துவது பற்றி சிந்திப்பதற்கு பணப்புழக்கத்தை உருவாக்குவது முக்கியமானது. ஆனால் அது மற்றொரு கேள்விக்கு வழிவகுக்கிறது:

ஒரு நிறுவனம் பணப்புழக்கத்தை உருவாக்கியவுடன்…

  • நிர்வாகம் அந்த பணத்தை என்ன செய்ய வேண்டும்?
  • மேலாளர்கள் அந்த பணத்தை புதிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமா?
  • அவர்கள் மற்ற நிறுவனங்களை கையகப்படுத்த வேண்டுமா? அல்லது
  • அவர்கள் அந்த பணத்தை தங்கள் பங்குதாரர்களுக்கு விநியோகிக்க வேண்டுமா?

ஒரு நிறுவனத்தின் வெற்றி: உயர்மட்ட நிர்வாகத்தின் கையில்

ஒவ்வொரு தலைமை நிர்வாக அதிகாரியும் (CEO) மற்றும் தலைமை நிதி அதிகாரியும் (CFO) இந்த முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த கேள்விகள் மூலதன ஒதுக்கீடு (capital allocation) செயல்முறையை தீர்மானிக்கின்றன.

உண்மையில், மூலதன ஒதுக்கீடு (capital allocation) என்பது உயர்மட்ட நிர்வாகத்தின் மிக முக்கியமான வேலைகளில் ஒன்றாகும்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி  (growth) மற்றும் இலக்குகளை (goals) அடைய மூலதனம் (capital) எவ்வாறு ஒதுக்கப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது என்பது நிர்வாகம் தங்கள் வேலையை எவ்வளவு சிறப்பாக செய்கிறது என்பதற்கான முக்கிய குறியீடாகும்.

புறநானூற்றில் நிர்வாகத்திற்கான நிதி மேலாண்மை பாடங்கள்

புறநானூற்றுக் கவிதையில் இருந்து கற்றுக் கொண்ட பாடம் – நிர்வாகம் பணத்தை விரயம் செய்யக் கூடாது – இது யானை வயல்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்வதற்கு ஒப்பாகும். நிர்வாகத்தின் வேலை என்னவென்றால், அந்த பணத்தை கவளங்களாகப் பிரித்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும்.

பழங்கால புறநானூற்றுக் கவிதையும் இன்றைய மூலதன ஒதுக்கீடும் இந்த புள்ளியில் தான் இணைகின்றன. 

Source of Apple and Google Capital allocation – 

Book – How Finance Works 

The HBR Guide to Thinking Smart About the Numbers

Author – Mihir Desai

Leave a Reply